Tuesday, 3 February 2015

கற்பகவல்லி நின் பொற்பதங்கள்



கற்பகவல்லி நின் பொற்பதங்கள்
இராகம்: இராகமாலிகா
தாளம் ஆதி

இயற்றியவர் யாழ்ப்பாணம் ந வீராமணி ஐயர்
பல்லவி
1 ஆனந்த பைரவி  
20 நாதபைரவி (ஜான்ய)
ஆரோ: S G2 R2 G2 M1 P D2 P N2 S (sa gi ri gi ma pa dhi pa ni sa)
அவ: S N2 D2 P M1 G2 R2 S (sa ni dhi pa ma gi ri sa)

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா தேவி
(கற்பகவல்லி)

பற்பலரும்
போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம்
நிறைந்த உயர் சிங்காரக்கோயில் கொண்ட
(கற்பகவல்லி)

நீயிந்த வேலைதனில் சேயன் எனை மறந்தால்
நானிந்த நானிலதில் நாடுதல் யாரிடமோ?
எனித்த  மௌனமம்மா  ஏழை எனக்கருள?
ஆனந்தபைரவியே  ஆதரிதாளுமம்மா
(கற்பகவல்லி
)

2
கல்யாணி
65 மேககல்யாணி (மேல)
ஆரோ: S R2 G3 M2 P D2 N3 S (sa ri gu mi pa dhi nu sa)
அவ: S N3 D2 P M2 G3 R2 S  (sa nu dhi pa mi gu ri sa)

எல்லோர்க்கும் இன்பங்கள் எளிதாய் இரைஞ்சி என்றும்
நல்லாட்சி செய்திடும் நாயகியே  நித்ய
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா
(கற்பகவல்லி
)

3 பகேஸ்ரீ
22 கரகரப்ரியா (ஜான்ய)
ஆரோ: S G2 M1 D2 N2 S (sa gi ma dhi ni sa)
அவ: S N2 D2 M1 P D2 G2 M1 R2 S (sa ni dhi ma pa dhi gi ma ri sa)

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்
வாகேஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ
தாயே பார்வதியே இந்த
லோகேஸ்வரி
 நீயே உலகினில் துணையம்மா
(கற்பகவல்லி)

4 ரஞ்ஜனி
59 தர்மாவதி (ஜான்ய)
ஆரோ: S R2 G2 M2 D2 S (sa ri gi mi dhi sa)
அவ: S N3 D2 M2 G2 S R2 G2 S (sa nu dhi mi gi sa ri gi sa)

அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்
கொஞ்சிகுலாவிடும்வஞ்சியே நின்னிடம்
தஞ்சமென அடைத்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்ஜனியே
ரக்ஷிப்பாய் கெஞ்சுகிரேனம்மா
(கற்பகவல்லி)




எனக்கு மிகவும் பிடித்த இந்த “கற்பகவல்லி நின் பொற்பதங்கள்” பாடல் வரிகளை வலைதளங்களில் தேடினேன். ஆனால் roman எழுத்து வடிவில் மட்டுமே கிடைத்தது. தமிழ் எழுத்துகளில் கிடைக்கவில்லை..
எனவே, நானே முயற்சி செய்து, தமிழ் எழுத்துக்களில் மாற்றினேன். என்னைப்போல் இன்னும் பலரும் இதேபோல் இந்த பாடலை தமிழ் வடிவில் படிக்க ஆசைப் படலாம்.
அவர்களுக்காக இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறேன். பிழைகள் இருப்பின் தயவு செய்து கருத்துகளை தெரிவிக்கவும். சரிசெய்துகொள்ள உதவும். நன்றி.